நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன! -பங்கேற்ற விவசாயிகள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.!

விவசாயிகள் பயன்பெறும் வகையில் பருத்தியில் அடர் நடவு சாகுபடி தொழில்நுட்பம் குறித்தும் அதனை பின்பற்றிய விவசாயிகளின் வெற்றிக்கதைகள் குறித்தும் அழகுதுரை, வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் விவசாயிகளிடம் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை (25.07.2024) 291.56 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. ஜீலை மாதம் முடிய இயல்பு மழையளவை விட 67.79 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஜீன் மாதம் வரை நெல் 30 எக்டர், சிறுதானியங்கள் 14,560 எக்டர், பயறு வகைகள் 3,051 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 16,220 எக்டர், பருத்தி 534 எக்டர் மற்றும் கரும்பு 2,369 எக்டர் என மொத்தம் 36,764 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் பருத்தியில் அடர் நடவு சாகுபடி தொழில்நுட்பம் குறித்தும் அதனை பின்பற்றிய விவசாயிகளின் வெற்றிக்கதைகள் குறித்தும் அழகுதுரை, வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் விவசாயிகளிடம் தெரிவித்தார். நடப்பு ஆண்டில் 110 ஏக்கரில் மத்திய பருத்தி ஆராய்ச்சி மூலம் அடர் நடவு முறையில் பருத்தி சாகுபடி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இத்திட்டத்தினை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்தார். நாமக்கல் மாவட்டத்தில் தற்பொழுது 16.9% வனப்பரப்பு உள்ளது. இதனை அடுத்த பத்து ஆண்டுகளில் 33% அதிகரிக்கும் பொருட்டு பசுமை தமிழகம் இயக்கத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளின் நிலத்தில் உரிய ஆய்வு மேற்கொண்டு மகோகனி, தேக்கு, அரசமரம், அத்தி, நீர் மருது, வேம்பு போன்ற மரக்கன்றுகள் வனத்துறை மூலம் இலவசமாக வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. விருப்பம் உள்ள விவசாயிகள் மாவட்ட வனத்துறையை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த சத்யா என்பவர் நமோ ட்ரோன் தீதி திட்டம் மூலம் 15 நாட்கள் பயிற்சி பெற்றுள்ளார். விவசாய நிலத்தில் உள்ள பயிர்களுக்குத் தேவையான நனோ யூரியா, நனோ டிஏபி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க மகளிர் சுய உதவிக்குழுவின் கிசான் ட்ரோன்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் விவசாயிகளுக்கு தெரிவித்தார்.மேலும், ஜல்சக்தி அபியான் மற்றும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேப்பங்கன்றுகள், மகோகனி மற்றும் வேம்பு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.இன்றைய தினம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் சி.கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன்,மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் க.ரா.மல்லிகா,கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு, வருவாய் கோட்டாட்சியர்கள் ஆர்.பார்தீபன் (நாமக்கல்), சே.சுகந்தி (திருசெங்கோடு), வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ப.கவிதா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ப.முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) க.இராமச்சந்திரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் (பொ) இ.கார்த்திகா துறை சார்ந்த அலுவலர்கள், விவசாய பெருமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story