நெரூரில் 300க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்ற நாத உற்சவ விழா நடைபெற்றது.

நெரூரில் 300க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்ற நாத உற்சவ விழா நடைபெற்றது.
நெரூரில் 300க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்ற நாத உற்சவ விழா நடைபெற்றது. கரூரை அடுத்த நெரூர் பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை நெரூர் சுயம்பு ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நாத உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இன்று 15 ஆம் ஆண்டு நாத உற்சவ விழா, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு கீர்த்தனைகளில் இணைந்து தங்களது இசைக்கருவிகளை இசைத்தனர். அப்போது கல்யாணி ராகம், சரஸ்வதி, சண்முகப்பிரியா, சாருகேசி, ஆபோகி, பகுதாரி, கதன குதூகலம், ஹிந்தோளம், ஆபோகி, ரேவதி போன்ற ராகங்களில் கீர்த்தனைகள் அமைத்து இசைக்கருவிகளை இசைத்தனர். செவிகளுக்கு விருந்து படைத்த இந்த நிகழ்ச்சியை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, நாத உற்சவ விழாவை மெய்மறந்து கண்டு களித்து அக்னிஸ்வரரின் அருள் பெற்று சென்றனர்.
Next Story