பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட 300 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல். காவல்துறை நடவடிக்கை.

பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட 300 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல். காவல்துறை நடவடிக்கை.
பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட 300 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல். காவல்துறை நடவடிக்கை. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா சற்று முன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், கரூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில், உதவி ஆய்வாளர் நாகராஜன், சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் மற்றும் காவலர்கள் தம்பிதுரை, யுவராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்ட முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின் படி, கரூர் மாவட்டம், ஜெகதாபி அருகே உள்ள துளசி கொடும்பு பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து மகன் பழனிச்சாமி வயது 40 என்பவர் பெங்களூருக்கு அடிக்கடி சென்று மதுபானங்களை குறைந்து விலையில் வாங்கி வந்து, கரூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு விற்று வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னரில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பழனிச்சாமி கடத்தி வந்த மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா விடுத்துள்ள அறிக்கையில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அவசியம் ஏற்பட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், பழனிச்சாமியை பிடித்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
Next Story