உடுமலை வனத்துறை அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை
Udumalaipettai King 24x7 |5 Nov 2024 2:28 PM GMT
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை மக்காச்சோளம் ,தானிய வகைகள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து உள்ளனர். இந்த நிலையில் வன எல்லை கிராமங்களான திருமூர்த்தி நகர் பொன ன்னாலமமன் சோலை,வளை பாளையம் ராவணபுரம தேவனூர் புதூர் ஜல்லிபட்டி ஆகிய கிராமங்களில் கடந்த சில தினங்களாகவே காட்டுப்பன்றிகள் இரவு மற்றும் பகல் நேரத்தில் புகுந்து மக்காச்சோளம் மற்றும் தென்னங்கன்றுகளை நாசம் செய்து வருகின்றது இதனால் விவசாயிகளுக்கு அதிக அளவு இழப்பீடு ஏற்படுகின்றது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தாலும் வனத்துறையினர் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதை கண்டித்து இன்று உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால பரபரப்பு ஏற்பட்டது அப்போது விவசாயிகள் கூறியதாவது.. கடந்த சில வாரங்களாகவே வன எல்லையில் காட்டுப் பன்றிகள் மற்றும் குரங்குகள் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது எனவே காட்டுப் பன்றிகளால் சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் வன எல்லை ஒட்டிய பகுதிகளில் மின்வேலி அமைக்க வேண்டும் , சேதமான பயிர்களுக்கு இழப்பீடு உரிய காலத்தில் வழங்க வேண்டும் மற்றும் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் ,வனவிலங்கு பட்டியிலில் இருந்து காட்டுபன்றியை நீக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து உள்ளோம் மேலும் 2 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்து உள்ளனர்.காட்டு பன்றிகள் ,குரங்குகளை கட்டு படுத்தவில்லை என்றால் மீண்டும் விவசாயிகளை ஓன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்
Next Story