கோடங்கிபட்டி அருகே பணம் வைத்த சூதாடிய இருவர் கைது ரூபாய் 300 பறிமுதல்.

கோடங்கிபட்டி அருகே பணம் வைத்த சூதாடிய இருவர் கைது ரூபாய் 300 பறிமுதல்.
கோடங்கிபட்டி அருகே பணம் வைத்த சூதாடிய இருவர் கைது ரூபாய் 300 பறிமுதல். கரூர் மாவட்டம் தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் விசாலாட்சிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் நவம்பர் 5ஆம் தேதி காலை 11 மணியளவில் கோடங்கிபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் உள்ள நான்கு வழி சாலை பகுதியில் செயல்படும் கோவிந்தராஜ் பஞ்சர் கடை பின்புறம் உள்ள முள் தோட்டத்தில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, கருங்கல் காலனி பகுதியைச் சேர்ந்த மருது பாண்டி வயது 38 மற்றும் கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, சாலை கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுதன் வயது 29 ஆகிய இருவரையும் கைது செய்து அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும் ரூபாய் 300-யும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.
Next Story