கரூரில் பல்வேறு மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

கரூரில் பல்வேறு மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
கரூரில் பல்வேறு மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கரூரில் பல்வேறு மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த தொண்டர்கள் முருகன் சிலை பரிசளித்து பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு கரூர் நகரப் பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த நபர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2026-ல் நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இப்போது இருந்து தயாராக வேண்டும் என திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திமுக கட்சியை பலப்படுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட திமுக செயலாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி தலைமையில் கட்சி அலுவலகமான அறிவாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தாந்தோணி கிழக்கு ஒன்றியம், கரூர் மாநகர வடக்கு பகுதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் நிர்வாகிகளுடன் சென்று திமுகவில் இணைந்தனர். அப்போது மாற்றுக் கட்சிகளில் இருந்து திமுகவில் இணைந்த தொண்டர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முருகன் சிலை பரிசளித்து, பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். புதிதாக இணைந்த கட்சியினருக்கு கட்சி துண்டை அணிவித்து, அவர்கள் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
Next Story