ராமநாதபுரம் அருகே சுமார் 300-க்கும் மேற்பட்ட முதியோர்கள் ஒருங்கிணைந்து சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர்

ஹெல் பேஜ் இந்தியா ஆர் ஆர் டி சி திட்டமும் ராமநாதபுரம் முதியோர் சுய உதவி குழு உறுப்பினர்களும் முதியோர் அமைப்பும் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது
ராமநாதபுரம் அருகே சுமார் 300-க்கும் மேற்பட்ட முதியோர்கள் ஒருங்கிணைந்து சமத்துவ பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடினர் ஹெல் பேஜ் இந்தியா ஆர் ஆர் டி சி திட்டமும் ராமநாதபுரம் முதியோர் சுய உதவி குழு உறுப்பினர்களும் முதியோர் அமைப்பும் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பெரிய ஐயனார் கோவில் வளாகத்தில் தை திருநாளாம் தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட முதியவர்கள் ஒருங்கிணைந்து கலந்து கொண்டு பானைகளில் பொங்கல் வைத்து கரும்பு கட்டி சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர் தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் சிறப்பு பெறும் வகையில் பொங்கல் விழாவை கொண்டாடினர் இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிலம்பாட்டம் நடன நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது இவ்விழாவில் ராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலர் தேன்மொழி மண்டபம் வட்டார அலுவலர் சோமசுந்தரம் மண்டபம் வட்டார வளர்ச்சி (ஊராட்சிகள்) அலுவலர் நடராஜன் உச்சிப்புளி காவல் நிலைய ஆய்வாளர் மருதுபாண்டியன் மற்றும் மருத்துவர்கள் மனோசியா நித்தியானந்தம் பிரியங்கா அழகுவேல் மணி ஆகியவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர் முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் பள்ளி குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் ஒயிலாட்டம் சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன இந்தியா மருத்துவ குழுவினர்களால் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது விழாவின் துவக்கத்தில் முதியோர் வாழ்வாதார திட்ட அலுவலர் கார்த்திக் ராஜா அனைவரையும் வரவேற்று பேசினார் விழாவின் நிறைவாக ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார் ஹெர்பேஜ் இந்தியா சமூக பாதுகாப்பு அலுவலர்கள் தர்மேந்திரன் வெங்கடேஷ் ஆகியோர் விழாவிற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர் வாழ்வாதார திட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் முதியோர்கள் இளைஞர்கள் பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.
Next Story