சின்ன குனிச்சி கிராமத்தில் எருது விடும் விழாவில் 300 கும் மேற்ப்பட்ட காளைகள் பங்கேற்பு

சின்ன குனிச்சி கிராமத்தில் எருது விடும் விழாவில் 300 கும் மேற்ப்பட்ட காளைகள் பங்கேற்பு
X
சின்ன குனிச்சி கிராமத்தில் எருது விடும் விழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம் சின்ன குனிச்சி கிராமத்தில் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு 27 ஆம் ஆண்டு மாபெரும் எருதுவிடும் விழா ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது இந்த விழாவில் 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடின திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்னகுனிச்சி கிராமத்தில் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு 27 ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா ஊர் பொது மக்கள் சார்பில் நடைபெற்றது இந்த விழாவில் ஆந்திரா மாநிலம் குப்பம் மற்றும் ஓசூர், கிருஷ்ணகிரி ,போச்சம்பள்ளி, ஆம்பூர் வாணியம்பாடி ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் பங்கேற்று சீறி பாய்ந்து ஓடின 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்று எருது விடும் விழாவினை கண்டு களித்தனர் எருது விடும் விழாவில் நூறுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் இந்த திருவிழாவில் அனைத்து களைகளுக்கும் கால்நடை மருத்துவ பரிசோதனைக்குட்பட்டு விழா போட்டியில் பங்கேற்றது அதிக தூரத்தை குறைந்த வினாடியில் ஓடிய காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன இதில் முதல் பரிசு ஒரு லட்சம் இரண்டாம் பரிசு 75 ஆயிரம் மூன்றாம் பரிசு 55 ஆயிரம் மற்றும் மொத்தம் 60 பரிசுகள் வழங்கப்பட்டன இந்த எருது விடும் திருவிழாவில் கால்நடை துறை , மருத்துவ துறை. தீயணைப்பு துறை.மின்சார துறை உள்ளிட்ட மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிருவாகிகள் பங்கேற்றனர்
Next Story