ராணி ஹகில்யா பாய் ஹோல்கர் 300வது பிறந்த நாள் விழா

X
Komarapalayam King 24x7 |3 Jun 2025 9:35 PM ISTகுமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் ராணி ஹகில்யா பாய் ஹோல்கர் 300வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் ராணி ஹகில்யா பாய் ஹோல்கர் 300வது பிறந்த நாள் விழா மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. சிறப்பு பேச்சாளராக மாநில சுற்றுச்சூழல் தலைவர் கோபிநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ராணி அகல்யா பாய் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மராட்டிய மாநிலத்தில் ராணியாக ஆட்சி செய்த ராணி ஹகில்யா பாய் ஹோல்கர், பெண்ணுரிமைக்காக போராடியவர். உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கைவிட வலியுறுத்தி, தனது ராஜ்ஜியத்தில் அதனை செயல்படுத்தினார். பெற்றோர் சொத்தில், மகள்களுக்கு உரிமை உண்டு என்பதை செயல்படுத்தினார். இது போன்ற எண்ணற்ற பெண்ணுரிமைகளை, பெற்றுத் தந்த ராணி ஹகில்யா பாய் ஹோல்கர் புகழ் பற்றி, சிறப்பு பேச்சாளர்கள் அனைவரும் எடுத்துரைத்தனர். இதில் முன்னாள் மாவட்ட பொதுச்செயலர் வழக்கறிஞர் சரவணராஜன், நகர தலைவர் வாணி, மாவட்ட துணை தலைவர் புவனேஸ்வரி, உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
