ஒன்றிய பிஜேபி மோடி அரசை கண்டித்து நாடு தழுவிய வேலையை நிறுத்தும்! 300 மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்

ஒன்றிய பிஜேபி மோடி அரசை கண்டித்து நாடு தழுவிய வேலையை நிறுத்தும்! 300 மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்
X
ஒன்றிய பிஜேபி மோடி அரசை கண்டித்து நாடு தழுவிய வேலையை நிறுத்தும்! 300 மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் ஒன்றிய பிஜேபி மோடி அரசை கண்டித்து நாடு தழுவிய வேலையை நிறுத்தும்! 300 மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம் விவசாயிகளுக்கு விரோதமாகவும் ஏழை எளிய மக்களுக்கு விரோதமாகவும் செயல்படும் ஒன்றிய பிஜேபி மோடி அரசை கண்டித்து நாடு தழுவிய வேலையை நிறுத்தும்! 300 மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தின் எதிரில் தொழிலாளர்கள் போராடி பெற்ற 44 சட்ட உரிமைகளை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 100% ஆதரவாக 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றியதும், விவசாயிகளுக்கு விரோதமாகவும், ஏழை, எளிய மக்களுக்கு விரோதமாகவும் செயல்படும் ஒன்றிய பிஜேபி மோடி அரசை கண்டித்து எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மேலும் இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்றது புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற்றிடு, குறைந்தபட்ச ஊதியம் மாதம் 26,000 ஆக நிர்ணயம் செய்திடு, ஒப்பந்த தினக்கூலி வெளிச்சந்தை முறை பயிற்சியாளர் போன்ற பெயர்களில் நடக்கும் சுரண்டலுக்கு முடிவு கட்டு, குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூபாய் 9000 நிர்ணயம் செய்திடு, பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்பவும் அமுலாக்கு, போனஸ் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை போன்ற தொகையை அதிகப்படுத்தி, விண்ணப்பித்த 45 நாட்களுக்குள்ளாக தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்வதை கட்டாயம் ஆக்கிடு, அத்தியாவாசிய பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, உணவு மருந்து விவசாய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு கொடுத்திடு ஆகிய 17 வகையான கோரிக்கைகளை முன்னிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். மறியல் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை காவல்துறையினரால் அகற்றப்பட்டு கைது செய்து பேருந்தில் கொண்டு சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர்.
Next Story