தொழிற்சங்கத்தில் 300 பேர் கைது

X
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்று சிஐடியு, ஏ ஐ டி யூ சி , தொமுச உள்பட 13 தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. ஈரோடு மாவட்டத்தில் அனைத்து தொழில் சங்கம் சார்பில் ஈரோடு பெரியார் நகர் அருகே இன்று காலை ஒன்று திரண்ட அனைத்து தொழிற் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகத்திற்கு முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட ஊர்வலமாக சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அனைத்து தொழிற் சங்கத்தினர் காந்திஜி ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு தயாராக இருந்த வாகனத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். ஏ ஐ டி யூ சி , தொமுச கவுன்சில் செயலாளர் கோபால், பொருளாளர் தங்கமுத்து உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைப்போல் கோபியிலும் நடைபெற்றது
Next Story

