ராசிபுரம் ரோட்டரி சங்கம் - தனியார் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

X
Rasipuram King 24x7 |22 Sept 2025 9:35 PM ISTராசிபுரம் ரோட்டரி சங்கம் - தனியார் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரோட்டரி சங்கமும்- கோவை ஜெம் தனியார் மருத்துவமனையும் இணைந்து வயிறு சம்பந்தமான இலவச மருத்துவ பரிசோதனை முகாமினை நடத்தின. முகாமில் பங்கேற்ற நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவர்களால் அல்டார சவுண்ட், என்டோஸ்கோப் போன்ற மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆலோசனைகள், இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் 300-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மேல் சிகிச்சை தேவைப்படுவோர் தொடர் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். முன்னாதாக நடைபெற்ற முகாம் தொடக்க விழாவில் ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் என்.சுரேந்தின் தலைமை வகித்தார். தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, முகாமினை பார்வையிட்டார். இதில் ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர், முன்னாள் எம்எல்ஏ.,. கே.பி.ராமசாமி, ரோட்டரி சங்க உதவி ஆளுநர் எஸ்.அன்பழகன், மாவட்ட ரோட்டரி சிறப்பு திட்டச் சேர்மேன் ரேவதி, ராசிபுரம் ரோட்டரி சங்கச் செயலர் ஏ.மஸ்தான், திட்டச் சேர்மேன் பி.கண்ணன் உள்ளிட்ட ரோட்டரி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Next Story
