திருச்செங்கோடு நகர காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் சுமார் 300 பேருக்குநகர காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி விழிப்புணர்வு
Tiruchengode King 24x7 |27 Nov 2025 8:46 PM ISTதிருச்செங்கோடு நகர காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் சுமார் 300 பேருக்குநகர காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி விழிப்புணர்வு ஏற்படுத்தினாரர். இனி தலைக்கவசம் அணியாமல் பிடி படுபவர்களுக்கு தலா ரூ 1000 அபராதம் விதிக்கப் படும்என எச்சரிக்கை விடுத்தார்
தலைக்கவசம் அணியாமல் செல்வதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது விபத்துகள் நடந்தாலும் பலரது உயிர் தலைக்கவசம் இல்லாதகாரணத்தால் பறிபோகிறது எனவே அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்பதை அறிவுறுத்தும் வகையில் திருச்செங்கோடு நகர காவல் நிலையம் சார்பில் காவல்நிலைய ஆய்வாளர் வளர்மதி சங்ககிரி ரோட்டில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெளியே வரும்போது அவர்களை அழைத்துச் செல்ல வருபவர்கள் தலைக்கவசம் இல்லாமல் வருவதை அறிந்து அந்தப் பகுதியில் காவல்துறையினர் போக்குவரத்து காவல்துறையினர் உதவியுடன் தலைக்கவசம் இல்லாமல் வந்தவர்களை மகளிர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நிறுத்தி வைத்து விழிப்புணர்வு தரும் வகையில்நகர காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசியபோது கூறியதாவது தலைக்கவசத்தால் உயிர் காக்கப்படும் உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.எனவே தலைக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் ஆயிரம் ரூபாய் அபராதம் என அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தி வந்தாலும் பலர் தலைக்கவசம் அணிவதில்லை பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்ல வருபவர்கள் தலைக்கவசம் இல்லாமல் வருவது வருத்தத்திற்குரியதாக இருக்கிறது எனவே அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் முதல் முறை என்பதால் எச்சரித்து அனுப்புகிறோம் அடுத்த முறை பிடிபட்டால் ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் வாகனத்தில் தலைக்கவசம் இல்லாமல் சென்றவர் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டப்படும் அவ்வாறே ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தில் மீண்டும் தலைக்கவசம் இல்லாமல் சென்றால் வண்டியினுடைய உரிமம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்செங்கோடு காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி பொதுமக்களிடம் எடுத்துக் கூறினார் பெண்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் குடும்பம் பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும் என அறிவுறுத்தினார்.தலைக்கவசம் இல்லாமல் வந்தவர்கள் இனிமேல் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு நகர காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்
Next Story


