ராஜபாளையம் அருகே சேத்தூரில் நடைபெற்ற பங்குனி பொங்கல் திருவிழாவில் 300-க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கியும் 200க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தும் நேர்த்தி

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரில் நடைபெற்ற பங்குனி பொங்கல் திருவிழாவில் 300-க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கியும் 200க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தும் நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்கள். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரில் உள்ள எக்கலா தேவி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பொங்கல் திருவிழா பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வந்த நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. பொங்கலின் 9 வது நாள் விழாவில் சிம்ம வாகனத்தில் பூச்சப்பரம், தண்டில் சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. வீதி உலாவின் போது 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். முளைப்பாரி ஊர்வலம் முடிந்தவுடன் கோயில் முன்பு வளர்க்கப்பட்ட பூக்குழியில், அப்பகுதியைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
Next Story

