வைகை அணையில் இருந்து இராமநாதபுரம் மாவட்ட மூன்றாம் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 3000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு .
Andippatti King 24x7 |10 Nov 2024 4:06 PM GMT
இராமநாதபுரம் மாவட்ட மூன்றாம் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 3000 கனஅடி வீதம் தண்ணீரை வைகை அணை உதவி செயற்பொறியாளர் முருகேசன் முன்னிலையில், நிர்வாக பொறியாளர் அன்பு செல்வம் பொத்தானை அழுத்தி திறந்து வைத்தார்
வைகை அணையில் இருந்து இராமநாதபுரம் மாவட்ட மூன்றாம் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 3000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு . தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகைஅணையின் நீர்மட்டம் 65 அடியை நெருங்கியுள்ள நிலையில் , இராமநாதபுரம் மாவட்ட மூன்றாம் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 3000 கனஅடி வீதம் தண்ணீரை வைகை அணை உதவி செயற்பொறியாளர் முருகேசன் முன்னிலையில், நிர்வாக பொறியாளர் அன்பு செல்வம் பொத்தானை அழுத்தி திறந்து வைத்தார் இன்று முதல் ஒன்பது நாட்களுக்கு 1830 மில்லியன் கன அடி தண்ணீர் மொத்தம் திறக்கப்படும் நிலையில் , இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 27,529 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையில் உள்ள பிரதான 7 மதகுகள் வழியாக ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர், ஐந்து மாவட்டங்களுக்கு ஆற்றில் செல்வதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . இதனால் ஆற்றில் யாரும் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என்றும் ஆற்றை கடக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்
Next Story