காஞ்சிபுரத்தில் தோட்டக்கலை பண்ணையில் 3,000 ரோஜா செடிகள்தயார்
Kanchipuram King 24x7 |25 Dec 2024 12:36 PM GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பாக பண்ணையில் 3000 ரோஜா செடிகள் தயார் நிலையில் உள்ளது
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை உள்ள விச்சந்தாங்கலில், அரசு தோட்டக்கலை பண்ணை இயங்கி வருகிறது.இங்கு பழம், மலர், வாசனை திரவியம், மூலிகை மற்றும் சாலையோரம் நடவு செய்யும் மரச்செடிகள் என, பல்வேறு வகையான செடிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால், பூமியில் உள்ள ஈரப்பதம் காரணமாகசெடிகள், மரக்கன்றுகள்நடவு செய்வதற்கு ஏதுவான தருணமாக உள்ளது. தற்போது பண்ணையில், ரோஜாப்பூ 3,000 செடிகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. அரசு நிர்ணயித்த விலையின்படி செம்மண், எரு, மணல் கலந்த 5 கிலோ எடை கொண்ட பாலீத்தின் பையுடன் ஒரு செடி 65 ரூபாய்க்குவிற்பனை செய்யப்படுகிறது. எனவே, ரோஜாசெடிகளை பொதுமக்கள்,விவசாயிகள் வாங்கிச் சென்று பயனடைலாம் என, விச்சந்தாங்கல் தோட்டக்கலை அலுவலர்சவுமியா, உதவி தோட்டக்கலை அலுவலர் தனஞ்செயன் ஆகியோர்தெரிவித்துள்ளனர்.
Next Story