அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து 3,000 நெல் மூட்டைகள் சேதம்

X
சிவகங்கை மாவட்டம், மானா மதுரை அருகே கட்டிக்குளத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அரசு நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு அப்பகுதி விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 3 வாரங்களாக விவசாயிகள் குவிந்து வருகின்றனர். ஆனால் ஏற்கெனவே நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கேயே தேக்கம் அடைந்துள்ளன. இதனால் தினமும் குறைந்த அளவே விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படு கிறது. இந்த தாமதத்தால் கொள் முதல் நிலையம் அருகே 20 நாட்களாக நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர். நேற்று முன்தினம் பெய்த மழையில் விவசாயிகள் வைத்திருந்த 3,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்தன. விவசாயிகள் தேங்கிக கிடைக்கும் நீரை கால்வாய் வெட்டி வெளியேற்றினர். இதுகுறித்து விவசாயி பெரிய சாமி கூறுகையில், '3 வாரங்களாக நெல் மூட்டைகளுடன் இரவு, பகலாக காத்திருக்கிறோம். மொத்தம் 10,000 மூட்டைகள் வரை எடுக்காமல் உள்ளன. தார்பாய் மூலம் நெல் மூட்டை களை முடி வைத்திருந்தோம். தாழ்வான பகுதியாக இருந்ததால் அடிப்பகுதியில் நெல் மூட்டைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் 3,600-க்கும் மேற்பட்ட மூட்டைகள் சேத மடைந்தன. இனி அவற்றை காய வைத்துதான் விற்பனை செய்ய முடியும்' என்றார். இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத்திடம் கேட்டபோது, ‘ஒரு நெல் கொள்முதல் நிலை யத்துக்கு ஒரு லாரி வீதம் அனுப்புகிறோம். அந்த லாரி மூலம் 20 டன் அளவுக்கு நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆனால் தற்போது அறுவடைப் பணி தீவிரமடைந்ததால், ஏராளமான விவசாயிகள் ஒரே சமயத்தில் நெல் மூட்டைகளுடன் வருகின்றனர். படிப்படியாக எடுத்து வருகிறோம். இன்னும் ஒரு வாரத்தில் சரியாகிவிடும். மேலும் மழை வருவதற்கு முன்பே தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள விவசாயிகளை அறிவுறுத்தினோம்' என்றார்.
Next Story

