முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் போட்டி 3000 பேர் பங்கேற்று அசத்தல்

மாதவரத்தில் மாரத்தான் போட்டி 3000 பேர் பங்கேற்று அசத்தல் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 3000 பேர் பங்கேற்ற மாரத்தான் ஓட்ட போட்டி மாதவரத்தில் நடைபெற்றது.
மாதவரத்தில் மாரத்தான் போட்டி 3000 பேர் பங்கேற்று அசத்தல் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 3000 பேர் பங்கேற்ற மாரத்தான் ஓட்ட போட்டி மாதவரத்தில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் அடுத்த மூலக்கடையில் சென்னை வட கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாரத்தான் போட்டியை எம் எல் ஏ சுதர்சனம் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் ஆகியோர் மாரத்தான் ஜோதியை ஏற்றி வைத்து கொடியசைத்து துவக்கி வைத்தனர் சென்னை மூலக்கடை சந்திப்பில் இருந்து மாதவரம் செங்குன்றம் சாலை வழியாக 5 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது போட்டியில் முதலிடம் பிடித்தவருக்கு முப்பதாயிரம் ரொக்கம் இரண்டாம் பிடித்தவருக்கு 20 ஆயிரம் ரூபாய் நோக்க பரிசு தொகையும் மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் என பரிசு வழங்கப்பட்டன இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழும் பதக்கங்களும் வழங்கப்பட்டன சென்னை வடகிழக்கு மாவட்ட பகுதி வட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் திமுக அணிகளின் பிற அமைப்பு நிர்வாகிகளும் பங்கேற்று மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்களை உற்சாகப்படுத்தினர்
Next Story