வாணியம்பாடி அருகே பெய்த ஆலங்கட்டி மழையினால் 3000 வாழை மரங்கள் மற்றும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம்*
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பெய்த ஆலங்கட்டி மழையினால் 3000 வாழை மரங்கள் மற்றும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்* திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உள்ள பூங்குளம் பகுதியில் நேற்று மாலை சுமார் 1 மணி நேரம் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 3000 செவ்வாழை மரங்கள் உடைந்து விழுந்தது, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்,கேழ்வரகு பயிர்கள் சாய்ந்தது.மேலும் மாமரங்களில் இருந்த பூக்கள், பிஞ்சுகள், பூச்செடிகளில் இருந்த பூக்கள் காற்றில் கீழே விழுந்தது. இதனால் நகைகள் அடகு வைத்து,வங்கிகள் மூலம் கடன் பெற்று பயிர் செய்த விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டதால் . மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story



