கோடை மழையால் 3000 ஏக்கர் பருத்தி பாதிப்பு

கோடை மழையால் 3000 ஏக்கர் பருத்தி பாதிப்பு
X
திருவாரூர் மாவட்டம் முழுவதும் கோடை மழையால் 3 ஆயிரம் ஏக்கர் பருத்தியை மழை நீர் சூழ்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மழையினால் 3000 ஏக்கருக்கு மேலான பரப்பளவிற்கு பருத்தி பயிர் பாதிப்பு..தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலை." திருவாரூர் மாவட்டத்தில், மாவட்டம் முழுவதும் குடவாசல், வலங்கைமான், நன்னிலம், கொரடாச்சேரி, திருவாரூர், கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கோடைகால பயிரான பருத்தி சாகுபடி சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டுள்ளது. தற்போது பருத்தி பல இடங்களில் பஞ்சு எடுக்கும் தருவாயில் உள்ளது.. கடந்த வாரம் சில தினங்கள் மழை பெய்தது, மீண்டும் தொடர்ந்து வெயில் அடித்து வந்த நிலையில்.. மீண்டும் கடுமையான காற்றுடன் மழை பெய்தது. இதனால் பருத்தி வயல்களில் தண்ணீர் மீண்டும் தேங்கியது இதேபோன்று மழை பெய்தால் தண்ணீர் தேங்கி பருத்தியின் வேர் அழுகும் நிலை ஏற்படும். . பருத்தி சாகுபடி கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய போதே மழை பெய்தது மீண்டும் இரண்டாவது முறையாக விவசாயிகள் சாகுபடி செய்தார்கள். அப்போதும் மழை பெய்தது தற்போது மூன்றாவது முறையாக சாகுபடி செய்யப்பட்டு தற்போது பருத்தி காய் வைத்து பஞ்சு வரும் நிலையில் அவ்வப்போது பெய்து வரும் மழை விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தண்ணீர் ஆறுகளில் அதிக அளவு வருவதால் வாய்க்கால்களில் தண்ணீர் வடிய முடியாத நிலையும் தொடர்ந்து மழை பெய்தால் பருத்தி சாகுபடி முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
Next Story