கொடுவாய் அருகே எல்லப்பாளையம் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.3000 லஞ்சமாக வாங்கிய ஊராட்சி மன்ற செயலாளரை கைது செய்த  லஞ்ச ஒழிப்புத்துறையினர் - பரபரப்பு  

கொடுவாய் அருகே எல்லப்பாளையம் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.3000 லஞ்சமாக வாங்கிய ஊராட்சி மன்ற செயலாளரை கைது செய்த  லஞ்ச ஒழிப்புத்துறையினர் - பரபரப்பு  
X
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கொடுவாய் அருகே எல்லப்பாளையம் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.3000 லஞ்சமாக வாங்கிய ஊராட்சி மன்ற செயலாளர் செல்வராஜ், லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செயப்பட்டது இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கேயம் ஊதியூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கொடுவாய் அருகே உள்ளது எல்லப்பாளையம் ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டதாக கடந்த வருடம் முதலே புகார்கள் எழுந்தவண்ணம் இருந்து வந்தது. மேலும் கடந்த ஆண்டு 2023ம் ஆண்டு போட்ட ரோட்டுக்கு  பிப்ரவரி மாதம் 2024 ஆண்டு மீண்டும் டெண்டர் விடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் அரசு நிதியை நூதனமாக கொள்ளையடிக்கும்  அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதே போல் ஏற்கனவே போட்ட சாலைக்கு மீண்டும் நிதி ஒதுக்கி சாலைகள் போட்டதுபோல் பணம் கையாட பட்டுள்ளதாகவும் இதில் காண்ட்ராக்ட் நிறுவனம் முதல் அரசு அதிகாரிகள் என பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது.  இந்த நிலையில் சக்தி விநாயகர் புறம் பகுதியை சேர்ந்த மகேஷ் பாபு  என்பவரிடம் குடிநீர் இணைப்பு பெறுவதற்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரியும் ஊராட்சி மன்ற செயலாளர் செல்வராஜ் ரூ.3000 பணம் லஞ்சமாக கேட்டதாகவும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை மகேஷ் பாபுவிடம் கொடுத்தது அனுப்பியுள்ளனர். இதையடுத்து  எல்லப்பாளையம் ஊராட்சி செயலாளர் செல்வராஜ் லஞ்சம் வாங்கும் போது  கையும்களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.71,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் கொடுவாய் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story