வேப்பிலைக்குட்டை ஓம் சக்தி முருகன் கோவிலில் பூமிதி திருவிழா., 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு..

X
Rasipuram King 24x7 |19 July 2025 8:16 PM ISTவேப்பிலைக்குட்டை ஓம் சக்தி முருகன் கோவிலில் பூமிதி திருவிழா., 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு..
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த திம்மநாயக்கன்பட்டி அருகேயுள்ள வேப்பிலைக்குட்டையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஓம் சக்தி முருகன் கோவில் இக்கோவிலில் வருடம் தோறும் ஆடி முதல் வெள்ளிக்கிழமை தினத்தன்று பூ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம், அதேபோல இந்த ஆண்டும் ஆடி முதல் வெள்ளியில் திருவிழா துவங்கியது. இக்கோவிலில் அமைந்துள்ள 48 உயரத்தில் உள்ள ஆறுபடை முருகன் சிலை, 48 அடி உயரத்தில் எட்டுகை அம்மன், 28 அடி உயரத்தில் அஷ்டகால பைரவர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யபட்டு திருவிழா தொடங்கியது இக்கோவிலில் ஆடித்திருவிழாவின் போது குழந்தை வரம் வேண்டி ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் வேண்டுதல்கள் வைப்பார்கள் அப்படி வேண்டுதல் வைக்கும் பக்தர்களுக்கு குழந்தை பிறந்தால் எடைக்கு எடை காணிக்கை செலுத்தும் துலாபாரம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.மேலும் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலை சுற்றி உருளுதாண்டம் போட்டு அங்க பிரதட்சனை செய்தனர். இதனைத் தொடர்ந்து சக்தி அழைக்கும் நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக வந்து தீமிதி விழாவில் பங்கேற்றனர் முதன்முதலாக கோவில் பூசாரி ஓம் சக்தி முருகன் சுவாமி தீ மிதித்து நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து 1000க்கும் மேற்பட்ட பெண்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவில் ஈரோடு, சேலம், திருச்சி, தம்பம்பட்டி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து 3000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதனைத் தொடர்ந்து காலை முதல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது...
Next Story
