பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.30.31 லட்சத்திற்கு ஏலம்

X
குமரி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு குழித்துறை அலகு (இருப்பு நாகர்கோவில்) பறிமுதல் செய்யப்பட்ட 11 இருசக்கர வாகனங்கள், 14 ஆட்டோக்கள் மற்றும் 28 நான்குசக்கர வாகனங்கள் என மொத்தம் 53 வாகனங்களின் பொது ஏலம் நேற்று நாகர்கோவிலுள்ள குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்தது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் ராஜா, எஸ்ஐ வேல்முருகன், அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்க அதிகாரி விஜயகுமார் ,வருவாய் அலுவலர் நிவாஸ் ஆகியோர் தலைமையில் வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. ஏலம் எடுக்கும் நிகழ்ச்சியில் மொத்தம் 80 பேர் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். இந்த ஏலம் காலை 11 மணி முதல் மதியம் 2:30 மணி வரை நடைபெற்றது. ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். இதில் 52 வாகனங்கள் ரூ.30 லட்சத்து 31 ஆயிரத்து 500 க்கு ஏலம் போனது. வாகனங்கள் ஏலம் எடுக்காதவர்களுக்கு முன் வைப்பு தொகை திரும்ப வழங்கப்பட்டது.
Next Story

