பாபநாசம் அணைக்கு 3076 கன அடி தண்ணீர் வரத்து

பாபநாசம் அணைக்கு 3076 கன அடி தண்ணீர் வரத்து
X
பாபநாசம் அணை
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 3,076 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1,750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Next Story