ஆண்டிபட்டியில் 31 அம்ச கொள்கைகளை வலியுறுத்தி ஆண்டிபட்டி தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு டிட்டோஜாக் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் .
Andippatti King 24x7 |10 Sep 2024 4:01 PM GMT
ஆண்டிபட்டி வட்டார கல்வி அலுவலகம் முன்பு டிட்டோஜாக் ஆசிரியர் சங்கத்தினர் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆண்டிபட்டியில் 31 அம்ச கொள்கைகளை வலியுறுத்தி ஆண்டிபட்டி தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு டிட்டோஜாக் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் . தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டார கல்வி அலுவலகம் முன்பு டிட்டோஜாக் ஆசிரியர் சங்கத்தினர் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சரவணமுத்து தலைமை தாங்கினர் ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் ராஜவேல் , மாநில வெளியீட்டு செயலாளர் பெரியசாமி முன்னிலை வைத்தார் ஆர்ப்பாட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையின் கட்டமைப்பை அழிக்கக்கூடிய பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் மாநில முன்னுரிமை அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும் புதிய ஓய்வூதியத்தை ரத்துசெய்து பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டுவர வேண்டும் மத்திய அரசிற்கு இணையான ஊதியத்தை 2006ம் ஆண்டு முதல் கொண்டுவர வேண்டும் முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு உதயத்தை மீண்டும் வழங்க வேண்டும் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை பாதுகாக்கும் இ எம் ஐ எஸ் பதிவேற்ற முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிபட்டி வட்டார அளவிலான தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி , தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சேர்ந்த ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story