முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 31 லட்ச ரூபாய் தனது சொந்த நதியில் இருந்து நன்கொடையாக ஏல விவசாய கல்லூரிக்குவழங்கினார்
Bodinayakanur King 24x7 |20 Nov 2024 11:39 AM GMT
தனது நிதியில் வழங்கிய அமைக்கப்பட்ட கணினி வளாகத்தை திறந்து வைத்தால்
தேனி மாவட்டம் போடி ஏல விவசாய சங்க கல்லூரியில் 31 லட்சம் தனது சொந்த நிதியில் நன்கொடையாக வழங்கி அமைக்கப்பட்ட நவீன ஆங்கில மொழி ஆய்வகத்தை போடி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். தேனி மாவட்டம் போடியில் உள்ள ஏல விவசாய சங்க கல்லூரியில் நவீன ஆங்கில மொழி ஆய்வகம் அமைக்கப்பட்டு 30 கணினிகளுடன் நவீன மையத்துடன் அமைக்கப்பட்ட ஆய்வகத்தை முன்னாள் முதல்வரும் போடி சட்டமன்ற உறுப்பினருமான ஓ பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தேனி மாவட்டத்தில் முதல் முறையாக ஆங்கில மொழி ஆய்விற்காக திறக்கப்பட்ட இந்த ஆய்வகத்தை ஓ பன்னீர்செல்வம் திறந்து வைத்து ஆய்வகத்தில் உள்ள கணினி மென்பொருட்களில் பற்றி கேட்டறிந்தார். இன்ஜினியரிங் கல்லூரியில் மட்டுமே இருக்கும் இந்த ஆய்வகம் தற்போது முதல் முறையாக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. போடி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 31 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டு இந்த ஆய்வகம் போடி சட்டமன்ற உறுப்பினர் ஓ பன்னீர்செல்வம் அவர்களால் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
Next Story