பயிர்கள் காப்பீடு செய்ய ஜன.31 கடைசி நாள்.
Madurai King 24x7 |22 Jan 2025 10:00 AM GMT
மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் சொந்த நிலம், குத்தகை நிலம் உள்ளவர்கள் சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை கொண்டு இ-சேவை மையம் மூலம் காப்பீடு செய்யலாம். இதன் மூலம் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் மகசூல் இழப்பீட்டில் இருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். தேசிய, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெறும் விவசாயிகள், வேளாண் நகை கடன் பெறாத விவசாயிகள் இத்திட்டத்தில் இணையலாம். கட்டணத்தை தேசிய வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், அரசு பொது சேவை மையங்களில் செலுத்தலாம். நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.534 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய ஜன.31 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story