வாணியம்பாடி மருதர் கேசரிஜெயின் மகளிர் கல்லூரியில் 31 வது ஆண்டுவிழா!

வாணியம்பாடி மருதர் கேசரிஜெயின் மகளிர் கல்லூரியில் 31 வது ஆண்டுவிழா!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரிஜெயின் மகளிர் கல்லூரியில் 31 வது ஆண்டுவிழா! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் 31 -ஆவது கல்லூரி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது . இவ்விழாவிற்கு கல்லூரி தலைவர் விமல் சந்த் ஜெயின், தலைவர் திலீப் குமார் ஜெயின், செயலாளர் ஆனந்த் சிங்வி, நிர்வாகக் குழு உறுப்பினர் ராஜேஷ் குமார் ஜெயின், கல்லூரி இணைத்தலைவர் ஸ்ரீ பால்குமார் ஜெயின், இணைச் செயலாளர் நவீன் குமார் ஜெயின் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் டாக்டர் எம். இன்பவள்ளி, கல்வி ஆலோசகர் டாக்டர் பாலசுப்பிரமணியன், தலைமை நிர்வாக அலுவலர் சக்திமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை விருந்தினராக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் சென்னை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணை செயலாளர் டாக்டர். சுதா சேஷய்யன் அவர்களும், சிறப்பு அழைப்பாளராக இந்திய திரைப்பட பின்னணி பாடகி சென்னை ஸ்ரீநிஷா ஜெயசீலன் அவர்களும் வருகை புரிந்தனர். கல்லூரி தலைவர் விமல் சந்த் ஜெயின் கடந்த 31 ஆண்டுகளாக பெண் கல்வி, பெண் சுதந்திரம், பெண் சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் என்று அனைத்து துறைகளிலும் பெண்களின் திறமைகளை வளர்த்தெடுப்பதை குறிக்கோளாக கொண்டு நம் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. மாணவிகள் அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி சமூகத்தில் சிறந்த பெண்களாக திகழ வேண்டும் என்றும் தலைவர் திலிப் குமார் ஜெயின் அவர்கள் நம் கல்லூரி மாணவிகள் மாவட்ட, மாநில, தேசிய ,சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்று உலகளாவிய கல்வி தரத்துடன் திகழ்கிறீர்கள்.எனவும், மேலும். செயலாளர் ஆனந்த் சிங்வி அவர்கள் தரமான கல்வியை புதுமையான முறையில் மாணவிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயலாற்றி வருகின்றோம். பேராசிரியர்கள் அனைவரும் முழுமையான அறிவையும் அர்ப்பணிப்பையும் அளித்து வருகின்றனர். நீங்கள் ஒவ்வொருவரும் சமூகத்தில் அனைத்து துறைகளிலும் சிறந்த பெண்களாக வலம் வரவேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார்கள். கல்லூரி முதல்வர் மாணவிகள் மற்றும் பேராசிரியர்களின் தனித்துவ செயல்பாடுகள் குறித்து ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தினர் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினர் டாக்டர் .சுதா சேஷய்யன் அவர்கள் சிறப்புரையாற்றுகையில் ஆண்களை விட பெண்கள் பன்மடங்கு திறன் வாய்ந்தவர்கள், புதுமையை அதிகம் சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள், உறுதியானவர்கள், குடும்பத்திலும் சமூகத்திலும் சிறந்து விளங்குபவர்கள், சான்றாக நிதானமாக இயங்கும் மின் தூக்கியில் யாரும் பயணிக்க விரும்பாத சூழலில் அதை சரி செய்ய கட்டிட நிறுவனரின் மனைவி தாமதமாக இயங்கும் மின் தூக்கியில் முகம் பார்க்கும் கண்ணாடியை பொருத்தினால் அவர்கள் பயணிக்கும் நேரம் பெரிதாக தெரியாது என்று புதுமையாக சிந்தித்து செயல்பட்டதை மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் எடுத்துரைத்தார். அவரைத் தொடர்ந்து பின்னணி பாடகி ஸ்ரீ நிஷா அவர்கள் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் வணங்குங்கள் நாம் வாழ்வில் சிறந்து விளங்குவோம் என்று வாழ்த்தி மாணவிகளின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு திரைப்பட பாடல்களை பாடி மகிழ்வித்தார். பின்னர் பல்கலைக் கழக தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 100% மதிப்பின் பெற்ற மாணவிகளுக்கும் விளையாட்டில் பல்கலைக்கழக அளவில் வெற்றி பெற்றவர்களுக்கும், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 2024-2025 ஆம் கல்வியாண்டில் கல்லூரியின் சிறந்த மாணவிகளாக கலைப்புலத்தில் மூன்றாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி தான்யா அவர்களும் அறிவியல் புலத்தில் மூன்றாமாண்டு வேதியியல் துறை மாணவி டி. கே. அப்சா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் 100% தேர்ச்சி விகிதம் பெற்ற பேராசிரியர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. பரதநாட்டியம் தமிழ் மற்றும் ஆங்கில நாடகம், நாட்டுப்புற கலைகள் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பெற்றோர்களுக்கும் மாணவிகளுக்கும் சிறப்பான முறையில் இரவு விருந்து அளிக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடினார்கள்.
Next Story