ராணிப்பேட்டையில் 31 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது

X
அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1994 ஆம் ஆண்டு, ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான நிலைய படைவீரர் சவுத்ரி என்பவர், அவரது மனைவியை பாஸ்கர் ஜோதி கோகாயுடன் சேர்ந்து கொலை செய்தார். இந்த வழக்கில் 2ம் குற்றவாளியான பாஸ்கர் ஜோதி கோகாய் 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்தார். இந்நிலையில் அவர் அசாம் மாநிலத்தில் இருப்பதாக தகவல் அறிந்து, அரக்கோணம் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
Next Story

