மெரினா நீச்சல் குளம் இன்று முதல் 31 வரை இயங்காது

X
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் நீச்சல்குளம் பராமரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கட்டண அடிப்படையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு மையம் தங்கு தடையின்றி இயங்க ஏதுவாக, 135 மீ குழாய் அமைத்தல், 1.80 மீ. விட்டம் கொண்ட 9 ஊறு குழிகள் பொருத்துதல், சோதனை வெள்ளோட்டம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்காக மெரினா நீச்சல் குளம் இன்று (ஜூலை 11) முதல் 31-ம் தேதி வரை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

