அரசு தொழில் பயிற்சி மையங்களில் மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது

அரசு தொழில் பயிற்சி மையங்களில் மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது
X
திருவாரூர் மாவட்டத்தில் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் நடப்பு ஆண்டு மாணவர் செயற்கைக்கான கால அவகாசம் இம்மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில் திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் அருகே நகர்,கோட்டூர் அருகே தட்டான்கோவில் மற்றும் கிடாரம்கொண்டான் பகுதிகளில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் நடுப்பு ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகள் நேரடியாக விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம்.மாணவர் சேர்க்கைக்கான கல்வி தகுதி வயது வரம்பு மற்றும் ஒதுக்கீடு ஆகியவை குறித்து www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விளக்க கையேடு தரப்பட்டுள்ளது நீடாமங்கலத்தில் உள்ள தொழில் பயிற்சி நிலையத்தில் பொறுத்துணர் கம்பியர்,மோட்டார் வண்டி கம்பியால், பற்ற வைப்பவர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதிக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம் பயிற்சி பெறும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக மாதம் தோறும் 750 ரூபாய் வழங்கப்படும் இது குறித்த அதிக விவரங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள 9865072426 9499055742 9677394290 என்ற எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
Next Story