அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு 31.07.2025 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு 31.07.2025 வரை  காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
X
அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு 31.07.2025 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
2025-ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு/ தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற் பிரிவுகளில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (Spot Admission) 31.07.2025 வரை சேர்க்கை நடைபெறுகிறது. எனவே ஏற்கனவே விண்ணப்பித்து ஒதுக்கீடு கிடைக்கப் பெறாதாவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவ/மாணவிகள்,அரசு நிர்ணயித்துள்ள 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு கீழ்க்கண்ட அரசு சலுகைகள் வழங்கப்படுகிறது. 1. மாதாந்திர உதவித்தொகை ரூ.750/- வழங்கப்படும். 2. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கப்படும். 3. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும். 4. 2 செட் சீருடை தையற்கூலியுடன் வழங்கப்படும். 5. பாடநூல்கள் மற்றும் வரைபடக்கருவிகள் வழங்கப்படும். 6. விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும். 7. மூடு காலணி வழங்கப்படும். 8. கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும். 9. அடையாள அட்டை வழங்கப்படும். 10. தேர்வு கட்டண விலக்கு வழங்கப்படும் மேலும்,பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முடிவில், வளாக நேர்முகத்தேர்வு நடத்தி (கேம்பஸ் இன்டர்வியூ) மூலம் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். ஊதியம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை தொழிற்நிறுவனங்களின் தகுதிநிலைக்கேற்ப வழங்கப்படும்.
Next Story