ராசிபுரம் பகுதியில் ரூ.3.15 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை: அமைச்சர், எம்பி., பங்கேற்பு..

X
Rasipuram King 24x7 |10 Oct 2025 9:12 PM ISTராசிபுரம் பகுதியில் ரூ.3.15 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை: அமைச்சர், எம்பி., பங்கேற்பு..
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் ரூ.3.15 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா பல்வேறு கிராமங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் பூமிபூஜையில் பங்கேற்று அடிக்கல் நட்டு வைத்து திட்டப் பணிகளை தொடங்கி வைத்தனர். கூனவேலம்பட்டி, போடிநாயக்கன்பட்டி,சிங்களாந்தபுரம், காக்கவேரி ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 14 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள் அடிக்கல் நட்டு வைத்து தொடங்கப்பட்டன. இதே போல், பொன்குறிச்சி பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில்புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தையும், அணைப்பாளையம் பகுதியில் ரூ.29 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய சமுதாயக் கூடத்தையும், அமைச்சர் மா.மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., ஆகியோர் திறந்து வைத்துப் பேசினர். இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் கேபி.ஜெகநாதன், ராசிபுரம் ஒன்றிய ஆணையாளர் எஸ்.பாஸ்கர், உதவிப் பொறியாளர் எஸ்.எஸ்.கெளரி, நாமக்கல் தெற்கு நகர திமுக செயலாளர் ராணா ஆனந்த், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர் சிவக்குமார், ஒன்றிய திமுக இளைஞர் அணி அமைப்பாளர் சிவசேகரன், ஒன்றிய நிர்வாகிகள் முத்துசெல்வம், பன்னீர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
Next Story
