நாகர்கோவிலில் கல்லூரி சந்தை ரூ. 3.19 லட்சத்துக்கு விற்பனை

நாகர்கோவிலில் கல்லூரி சந்தை ரூ. 3.19 லட்சத்துக்கு விற்பனை
X
குமரி
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கல்லூரி சந்தை நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்றது. இதில் 30 கடைகள் அமைக்கப்பட்டு 3 நாட்கள் நடைபெற்றது. இந்த கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சியை  கல்லூரி பொறுப்பு முதல்வர் ஜாக்குலின் கோல்டு மற்றும் மகளிர் திட்ட இயக்குனர் முஹம்மது நசீர் தொடங்கி வைத்தனர்.       இதில் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள், சிறுதானிய உணவுகள், மீன் சார்ந்த உணவுகள், கைவினைப் பொருட்கள், சங்கு பொருள்கள், பனை ஓலை பொருட்கள், சணல் பொருட்கள், ஆயத்த ஆடைகள், பேன்சி பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.       இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விருப்பமான பொருட்களை வாங்கி சென்றனர். மூன்று நாட்கள் நடைபெற்ற கல்லூரி சந்தையில் ரூ.3.19 லட்சம் மதிப்பில் விற்பனை நடைபெற்றது.       நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் பொன் குமார், கல்லூரி தாளாளர் நெல்சன், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் தங்க ராஜா உட்பட அலுவலக பணியாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story