தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் மீது 32 வழக்குகள் நிலுவை

தஞ்சாவூர் பாஜக வேட்பாளர்   மீது 32 வழக்குகள் நிலுவை

கோப்பு படம் 

தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் மீது 32 வழக்குகள் நிலுவை

தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு எம்.முருகானந்தம் மீது 32 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அவர் தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கருப்பு எம். முருகானந்தம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, அவர் தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில் 2 கொலை முயற்சி, பொது சொத்தைச் சேதப்படுத்தியது உள்பட 33 வழக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதில், ஒரு வழக்கு மட்டும் கைவிடப்பட்டது. இவர் தனது சொத்து விவரத்தில் தன் பெயரிலும், மனைவி பெயரிலும் ரூ. 2.26 கோடி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், திமுக வேட்பாளர் ச. முரசொலி தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில்,

கொரோனா காலத்தில் கிராம சபைக் கூட்டம் நடத்தியது, அனுமதியின்றி பதாகை வைத்தது, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது என மொத்தம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை கைவிடப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவரது சொத்து விவரத்தில் தனது பெயரிலும், தன் மனைவி பெயரிலும் அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 2.07 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக வேட்பாளர் பெ.சிவநேசன் மீது எந்த வித குற்ற வழக்கும் இல்லை என அவர் உறுதிமொழிப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இவர் சொத்து விவரத்தில் தன் பெயரிலும், மனைவி பெயரிலும் ரூ.1.40 கோடி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.ஐ. ஹூமாயூன் கபீர் தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில் ரூ. 2.05 கோடி சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story