ஜெயங்கொண்டத்தில் 32வது குழந்தைகள் அறிவியல் மாநாடு.

ஜெயங்கொண்டத்தில் 32வது குழந்தைகள் அறிவியல் மாநாடு.
X
ஜெயங்கொண்டத்தில் 32வது குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது.
.அரியலூர், ஜன.31 - ஜெயங்கொண்டத்தில் 32-வது குழந்தைகள் அறிவியல் மாநாடு. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும் ஆய்வு மனப்பான்மையை உருவாக்கவும், மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்கும் வகையில் ஆண்டுதோறும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டை கடந்த 32 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. 2024 - 25 ஆண்டுக்கான குழந்தைகள் அறிவியல் மாநாடு சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனம் மற்றும் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளுடன் இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலம் முழுவதும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான ஆய்வு கருப்பொருளாக நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டு அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தனர். இவனைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. ஆய்வுகள் செய்து ஆய்வறிக்கைகளை தயார் செய்த மாணவ மாணவிகள் அவர்களது வழிகாட்டி ஆசிரியர்களுடன் நிகழ்வில் கலந்துகொண்டு ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்தனர். மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த 150 ஆய்வுக் கட்டுரைகளில் 120 ஆய்வுக் கட்டுரைகள் நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்டது. இதிலிருந்து ஜூனியர் சீனியர் என இரு பிரிவுகளில் இருந்து 6 ஆய்வு கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு மண்டல அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாலையில் நடைபெற்ற பங்கேற்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முத்துக்குமார் தலைமையேற்று மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைப்பு பொருளாளர் நிவேதா வரவேற்று பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் ஸ்டீபன்நாதன் மாணவ மாணவிகளின் ஆய்வு கட்டுரைகளை தேர்வு செய்து அறிவித்து சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் அருண்கார்த்திக் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான மண்டல ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன், பொருளாளர் சதாசிவம், முன்னாள் தலைவர் பழனியப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி தெரிவித்து பேசினார்.
Next Story