சேலம் மாவட்டத்தில் 32 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்

சேலம் மாவட்டத்தில் 32 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்
X
அமைச்சர் இன்று திறக்கிறார்
சென்னையில் கடந்த ஆண்டு நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஜெனரிக் மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதற்கட்டமாக ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என அறிவித்தார். அதன்படி இன்று சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து சேலம் சின்ன திருப்பதி ரேஷன் கடை வளாகத்தில் தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது. கலெக்டர் பிருந்தா தேவி தலைமை வைக்கிறார். மேயர் ராமச்சந்திரன், செல்வகணபதி எம் பி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு முதல்வர் மருந்தகங்களின் செயல்பாட்டை தொடங்கி வைக்கிறார். சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 16 முதல்வர் மருந்தகமும், தொழில் முனைவோர் மூலம் 16 முதல்வர் மருந்தகம் என மொத்தம் 32 முதல் மருந்தகங்கள் துவக்கப்பட உள்ளது. இந்த மருந்தகங்களில் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் ஜெனரிக் மருந்துகள் 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையிலும், பிற மருந்துகளுக்கு 25% வரை தள்ளுபடி விலையிலும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Next Story