சோழ மன்னன் வணங்கிய கங்கை கொண்ட சோழபுரம் கணக்க விநாயகர் கோவில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்.

சோழ மன்னன் வணங்கிய கங்கை கொண்ட சோழபுரம் கணக்க விநாயகர் கோவில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு  கும்பாபிஷேகம்.
X
சோழ மன்னன் வணங்கிய கங்கை கொண்ட சோழபுரம் கணக்க விநாயகர் கோவில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சோழ மன்னன் வணங்கிய கங்கை கொண்ட சோழபுரம் கணக்க விநாயகர் கோவில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நேற்று மண்டல அபிஷேகம் நடைபெற்றது கங்கை கொண்ட சோழபுரம் அருள்மிகு கணக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி நடைபெற்றது. கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பெரியநாயகி உடனுறை பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு வருகை புரிந்த திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு திருக்கோயில் சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது பின்பு சுவாமி அம்பாளுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. மாமன்னன் இராஜேந்திர சோழனால் வழிபாடு செய்யப்பட்ட அருள்மிகு கணக்க விநாயகர் ஆலயம் கடந்த 1993 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 32 ஆண்டுகளுக்குப் பிறகு தை மாதம் 20ம் தேதி பிப்ரவரி 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கடந்த ஜன.4 ம் தேதி கோயில் கும்பாபிஷேக பத்திரிக்கை வழிபாடு செய்து படைக்கப்பட்டது. அதன் பின்னர் கும்பாபிஷேகத்திற்கான முதல் பத்திரிக்கையை திருவாடுதுறை ஆதினம் வழங்கிட்டார். பிரகதீஸ்வரர் கோவிலில் இருந்து கணக்க விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதை முன்னிட்டு புனித நீரானது தஞ்சை மாவட்டம் திருலோக்கி கைலாசநாதர், மாளிகை மேடு, கங்கைகொண்ட சோழபுரம், பிரகதீஸ்வரர் ஆலயம் போன்ற இடங்களில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு ஊர் பொதுமக்கள் புனித நீர் முளைப்பாரி எடுத்துக்கொண்டு கிரிவலப் பாதை வழியாக கணக்க விநாயகர் ஆலயத்தை வந்து அடைந்தனர் பின்பு மகா கணபதி ஹோமம் நடைபெற்று கும்பாபிஷேக விழா தொடங்கியது. கணக்க விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு கணக்க விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்க பெற்று நடைபெற்றது.இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புது கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோபுரம் உச்சியில் அமைக்கப்பட்டது அதன் பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது இந்த ஆன்மீக நிகழ்வில் திருப்பனந்தாள் காசிமட இளவரசு தம்பிரான் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கும் அபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா முடிந்து 48 ஆம் நாள் மண்டல அபிஷேகம் நேற்று நடைபெற்றது. மண்டலம் அபிஷேகத்தில் முன்னிட்டு கணபதி ஹோமம் சிறப்பு அபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற்று அன்னதானம் நடைபெற்றது. அருகில் சுற்றுப்புறத்தில் உள்ள மாளிகை மேடு உட்கோட்டை கங்கை கொண்ட சோழபுரம், குருவாலப்பர் கோவில் சம்போடை பாகல்மேடு சின்ன வளையம் புதுச்சாவடி ஆமணக்கண் தோண்டி கடாரங் கொண்டான் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் இந்து சமய அறநிலைத்துறை பிரகதீஸ்வரர் கோயில் சேயல் அலுவலர் செந்தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story