போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல்

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல்
X
32 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,01,000 அபராதம் விதித்து, மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக, அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் மோகன் (36) என்பவர் மீது அரும்பாவூர் போலீசார் கடந்த 2022 ஆம் ஆண்டு Cr.No : 291/22 Uls 450 506 (i) 305 IPC r/w 5 (M), 6 of POCSO Act ý போக்சோ வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் இவ்வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற விசாரணையில் இவ்வழக்கில் 06.06.2025 ஆம் தேதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மேற்படி எதிரியை குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம் இன்று 09.06.2025-ம் தேதி மோகன் என்பவருக்கு 450 பிரிவின் கீழ் 10 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ. 50,000 அபராதம் 5(M) r/w Pocso Act - 20 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ. 50,000 भएं, 506(i) IPC 2 வருடம் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் மொத்தம் 32 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,01,000 அபராதம் விதித்து, மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார். மோகனை போலீசார் கடுங்காவல் சிறைக்காவலுக்கு அனுப்பி வைத்தனர்
Next Story