சேலம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.32 லட்சத்தில் மருத்துவ பரிசோதனை கருவிகள்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில்ரூ.32 லட்சத்தில் மருத்துவ பரிசோதனை கருவிகள்
X
அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உடலியல் மருத்துவம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் ரூ.32 லட்சத்தில் 2 புதிய மருத்துவ பரிசோதனை கருவிகள் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கினார். மருத்துவக்கல்லூரி முதல்வர் தேவி மீனாள் வரவேற்று பேசினார். அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு புதிய மருத்துவ பரிசோதனை கருவிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறும் போது, தற்போது தொடங்கி வைக்கப்பட்டு உள்ள அதிநவீன மருத்துவ கருவிகள் மூலம் மனிதர்களின் உள் உறுப்புகள் மட்டுமின்றி, தசை, மூட்டு பகுதி, சவ்வு ஆகியவற்றை பரிசோதனை செய்து, ஆரம்ப நிலையிலேயே நோய்கள் கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறினார். முன்னதாக அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள புற்று நோய் வளாக கட்டிடம், உயர் துல்லிய கதிர்வீச்சு சிகிச்சை கருவி உள்பட பல்வேறு அதிநவீன கருவிகளின் பயன்பாடுகளை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
Next Story