வீட்டை உடைத்து 32 பவுன் நகை திருட்டு

வீட்டை உடைத்து 32 பவுன் நகை திருட்டு
X
நாகர்கோவில்
நாகர்கோவில் புன்னைநகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுராஜன் என்ற ராஜன் (56). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா (52). இவர் தனது மகளுடன் புன்னைநகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கீதாவின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தீதா மகளுடன் கன்னியாகுமரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். நேற்று அவர் வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 32 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர்.       இது குறித்து கீதா நேசமணி நகர் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க 2தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சிசிடிவி கேமராவின் காட்சிகளை  கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
Next Story