ராசிபுரம் நகர்மன்றக் கூட்டம்: 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்...

ராசிபுரம் நகர்மன்றக் கூட்டம்: 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்...
X
ராசிபுரம் நகர்மன்றக் கூட்டம்: 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர்மன்றக்கூட்டம் நகராட்சி அலுவலக கூட்டரங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகர் மன்றத் தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவி்தா சங்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நகராட்சி ஆணையாளர் ஒய்.நிவேதிதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மன்ற தீர்மானங்கள் பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது. நகராட்சி சார்பில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள தினசரி மார்கெட் 58 கடைகள் உள்ளதாக கட்டப்பட்டுள்ளது. இதில் 6 கடைகளை தவிர பெரும்பாலான கடைகள் பலமுறை அறிவிப்பு வெளியிட்டும் ஏலம் போகவில்லை. எனவே இந்த கடைகள் ஆண்டு குத்தகையில் மாற்றம் செய்து பொது ஏலம் விடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. நகரில் பல்வேறு வார்டுகளில் பழுதான உப்பு நீர் குழாய்களை சரி செய்யவும், ஆழ்துளை கிணறு மின்மோட்டார் சீரமைக்கவும் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் 17-வது வார்டில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4.50 லட்சம் மதிப்பில் பொது கழிப்பிடம் சுற்றுச்சுவர் அமைக்கவும், பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தரைப்பகுதியில் மழைநீர் தேங்காதவாறு சிமெண்ட் தளம், நடை பாதைக்கு பேவர் பிளாக் அமைக்கவும் ரூ.7.90 லட்சம் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகர்மன்ற துணைத் தலைவர், உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் என பலரும் பங்கேற்றனர்.
Next Story