உண்டியல் கொள்ளையனுக்கு 320 நாள் ஜெயில்

உண்டியல் கொள்ளையனுக்கு 320 நாள் ஜெயில்
X
தக்கலை
தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியில் ஸ்ரீ கண்டன் தர்மசாஸ்தா கோயில் உள்ளது. இந்த கோவிலில் சம்பவ தினம் இரவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து கோவில் நிர்வாகிகள் தக்கலை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.        விசாரணையில் பள்ளியாடி பகுதியை சேர்ந்த தங்கமணி என்பவர் கோவிலில் திருடியது தெரிய வந்தது. இதை எடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.       நீதி மன்ற விசாரணைக்கு பின் தங்கமணிக்கு 320 நாட்கள் சிறை தண்டனையும் ரூ. 200 அபராதம் விதித்து நீதிபதி பிரவீன் ஜீவா உத்தரவிட்டார்.
Next Story