கரூர் மாவட்டத்தில் தொடர் அடை மழையால் 322.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் தொடர் அடை மழையால் 322.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் தொடர் அடை மழையால் 322.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களை புரட்டி போட்டது. இதனைத் தொடர்ந்து தென்மேற்கு வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து அடை மழையாக பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக விட்டு, விட்டு லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. நேற்று கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. செய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூரில் 31 மில்லி மீட்டர், அரவக்குறிச்சியில் 26.50 மில்லி மீட்டர், அணை பாளையத்தில் 42.00 மில்லி மீட்டர், க.பரமத்தியில் 24.20 மில்லி மீட்டர், குளித்தலையில் 16.40 மில்லி மீட்டர், மாவட்டத்தில் அதிகபட்சமாக தோகை மலையில் 43.40 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 32.50 மில்லி மீட்டர், மாயனூரில் 38.00 மில்லி மீட்டர், பஞ்சபட்டியில் 27.00 மில்லி மீட்டர், கடவூரில் 22.00 மி.மீ, பாலவிடுதியில் 11.00 மில்லி மீட்டர், மைலம்பட்டியில் 8.00 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 322.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 26.83 மில்லி மீட்டர் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story