மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் ரூ.3.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் ரூ.3.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
X
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் ரூ.3.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அரியலூர்,மே 15- அரியலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சிகளில், மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமின் 2 ஆவது நாளான வியாழக்கிழமை 2,171 பயனாளிகளுக்கு ரூ.3.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தெம்மானம், ஓட்டக்கோவில், பொய்யாதநல்லூர், வெள்ளுர், ராயம்புரம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர்,பல்வேறு துறைகளின் சார்பில் 2,171 பயனாளிகளுக்கு ரூ.3,22,51,105 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றனர்.முகாமுக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story