செஞ்சி நீதிமன்றத்தில் 325 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது

X
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதி மன்றத்தில் வாகன விபத்து உள்ளிட்ட 325 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.சாா்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கதிரவன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.பி.செல்வஅரசி, குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி பி.வித்யா ஆகியோா் வழக்குகளை விசாரணை செய்து சுமுகத் தீா்வு கண்டு நஷ்ட ஈட்டு தொகையை வழங்கினா்.செஞ்சி மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளில் தீா்வு எண்ணிக்கை 92 உட்பட வங்கி கடன், கல்விக் கடன், நிலப் பிரச்னை உள்ளிட்ட மொத்தம் 325 வழக்குகளுக்கு ரூ. 5 கோடியே 71 லட்சத்து 83 ஆயிரத்து 328 மதிப்பில் தீா்வு காணப்பட்டது. அதிகபட்சமாக ஒரு வாகன விபத்து வழக்குக்கு ரூ. 80 லட்சமும் மற்றொரு வாகன விபத்து வழக்குக்கு ரூ 62 லட்சமும் தீா்வு காணப்பட்டது.இதில் செஞ்சி அட்வகேட் அசோசியேஷன் தலைவா் ஜி.சக்திவேல், பாா் அசோசியேஷன் செயலா் டி.எஸ்.ஆா்.கலியமூா்த்தி, பாா் கவுன்சில் உறுப்பினா் கே.கதிரவன், வழக்குரைஞா் எஸ்.அசாருதின், அரசு வழக்குரைஞா் ஜி.கிருஷ்ணன், சட்ட உதவி முகாம் உதவியாளா் பூங்கொடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Next Story

