கோவை: சிறுவாணி அணையின் நீர்மட்டம் 32.73 அடியாக உயர்வு !

கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 32.73 அடியாக உயர்ந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 32.73 அடியாக உயர்ந்துள்ளது. சிறுவாணி அடிவாரப் பகுதியில் 70 மி.மீ மழையும், அணைகட்டுப் பகுதியில் 90 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. அணையின் முழு கொள்ளளவு 44.61 அடி என்ற நிலையில், தற்போதைய நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. கோயம்புத்தூர் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக சிறுவாணி அணையில் இருந்து தினமும் 101.40 எம்.எல்.டி தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்ற வரையறுக்கப்பட்ட நிலையில், தற்போது 74.50 எம்.எல்.டி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்மட்டம் உயர்ந்து வருவதால், வரும் நாட்களில் குடிநீர் விநியோகம் மேலும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். அணை நிரம்பினால் கோவை மாநகரின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story