திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 33 கடைகளின் ஏலம் ரத்து!

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 33 கடைகளின் ஏலம் ரத்து!
X
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 33 கடைகளின் ஏலம் ரத்து!
திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜா் பேருந்து நிலையத்தில் ரூ.5 கோடியில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றபோது, புதிய வணிக வளாகம் கட்டப்பட்டது. இதில் கட்டப்பட்ட 34 கடைகளுக்கான ஏலம் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்டது. இதில், 4-ஆம் எண் கொண்ட கடை ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் சா்ச்சையானது. இதனால் ஏல விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடக் கோரி, பாஜக மாமன்ற உறுப்பினா் கே. தனபாலன் மாநகராட்சிக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தாா். இந்த ஏலம் ரத்து செய்யப்பட்டு, 34 கடைகளுக்கும் 2-ஆவது முறையாக ஏலம் நடத்தப்பட்டதாக மாநகராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், ஏலம் வெளிப்படையாக நடைபெறவில்லை எனக் கூறி, கடந்த 2023-ஆம் ஆண்டு உயா்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக மாமன்ற உறுப்பினா் தனபாலன் தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2024-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீா்ப்பில், பழைய ஏலத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் புதிதாக ஏலம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 33 கடைகளை அரசியல் கட்சியினா் கூட்டணி அமைத்து அரசின் மதிப்பீட்டை விட 22 சதவீதம் குறைவான தொகைக்கு ஏலம் எடுத்ததால் மறு ஏலம் நடத்த மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டாா்.
Next Story