அருள்மிகு 33 அடி ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..

அருள்மிகு 33 அடி ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..
X
அருள்மிகு 33 அடி ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அரியா கவுண்டம்பட்டி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு 33 அடி ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோவிலில் ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு சாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ சண்டி கருப்பசாமி க்கு பால், தயிர்,மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் கடந்த மாதம் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற பிடிக்காசு வாங்கிய பக்தர்கள் ஏராளமானோர் நிண்ட வரிசையில் நின்று அதை மறு பூஜைக்கு எடுத்து வந்திருந்தனர். அதனை கோவில் பூசாரி சாமியிடம் வைத்து மறு பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கினார். மேலும் பல்வேறு பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியது அடுத்து ஆடு கோழி பலியிட்டு பொங்கல் வைத்து 33.அடி ஸ்ரீ சண்டி கருப்பசாமியை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
Next Story