திருச்செங்கோடு நகராட்சி 33 வார்டுகளிலும் வார்டு சிறப்புக்குழு கூட்டம் நாளை நடக்க உள்ளதுபொதுமக்கள் கலந்து கொள்ள அழைக்கும் விதமாக பிரச்சார வாகனம் இயக்கம்

திருச்செங்கோடு நகராட்சி33 வார்டுகளிலும் நாளை 29ஆம் தேதி புதன்கிழமை வார்டு சிறப்புக்குழு கூட்டம். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு நகராட்சி ஆணையாளர் வாசுதேவன்ஆகியோர் வீடு வீடாகச் சென்று துண்டறிக்கை கொடுத்து பொதுமக்களுக்கு அழைப்பு
திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் வார்டு சிறப்புகுழு கூட்டம் நாளை 29ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணி முதல் நடக்க உள்ளது எனவும் இதில் பொதுமக்கள் அந்தந்த வார்டு பகுதிகளில் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொண்டுதங்களது பகுதிகளில்அடிப்படை சேவைகளான குடிநீர்விநியோகம் திடக்கழிவு மேலாண்மை தெரு விளக்கு பராமரிப்பு பூங்கா பராமரிப்பு சாலை பழுதுமழை நீர் வடிகால் பராமரிப்பு போன்றவற்றில் ஏதாவது குறைகள் இருந்தால் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கலாம் எனநகராட்சி ஆணையாளர் வாசுதேவன் வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவித்துள்ளார் மேலும் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு மற்றும் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் நகர் மன்ற உறுப்பினர்கள் வீடு வீடாகச் சென்று துண்டறிக்கை கொடுத்து கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர் மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வார்டு வார்டாக சென்று பிரச்சாரம் செய்யும் வகையில் பிரச்சார வாகனத்தையும் துவக்கி வைத்தனர்.
Next Story